5 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை: வரைபடத்துடன் முழு விபரம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என வரைபடங்களுடன் முழு விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Update: 2021-10-29 07:47 GMT

 சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடங்கள்.

தமிழகத்தில் ௫ நாட்களுக்கான மழை நிலவரங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 

அதன்படி, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்று 29.10.2021: ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், விருதுநகர், மதுரை, சிவகங்கை , புதுக்கோட்டை, கடலூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

30.10.2021: தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, விருதுநகர், சிவகங்கை , கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

31.10.2021 முதல் 02.11.2021 வரை: தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மேலும் கனமழை எச்சரிக்கையாக 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ள மாவடங்களின் 5 நாட்களுக்கான விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, 











Tags:    

Similar News