தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரங்கள்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.;
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) 11, ராசிபுரம் (நாமக்கல்) 8,பேரையூர் (மதுரை), சிவகாசி (விருதுநகர்), சேலம், பெலாந்துறை (கடலூர்) தலா 7, ஆத்தூர் (சேலம்), விருதாச்சலம் (கடலூர்), கோவில்பட்டி (தூத்துக்குடி), கயத்தாறு (தூத்துக்குடி), திருச்செங்கோடு (நாமக்கல்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), பென்னாகரம் (தருமபுரி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), மஞ்சளார் தேனி), குப்பநத்தம் (கடலூர்), ஆழியார் (கோயம்புத்தூர்), கொடைக்கானல் தலா 6, குமாரபாளையம் (நாமக்கல்), சின்னக்கல்லார் (கோவை) தலா 5, சோலையார் (கோயம்புத்தூர்), மணியாச்சி (தூத்துக்குடி), துறையூர் (திருச்சி), ராமேஸ்வரம், கொடைக்கானல் (திண்டுக்கல்), தர்மபுரி, ஓசூர் (கிருஷ்ணகிரி), வைகை அணை (தேனி), அவலாஞ்சி (நீலகிரி), ஒகேனக்கல் (தருமபுரி), ஊத்துக்குளி (திருப்பூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), ஆண்டிப்பட்டி (தேனி), மெ.மாத்தூர் (கடலூர்) தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.