அடுத்த சிலமணி நேரத்துக்கு எந்tதெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

அடுத்த சில மணி நேரத்துக்கு எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்ற விவரத்தை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.;

Update: 2021-11-07 03:30 GMT

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், எழும்பூர், அண்ணாநகர், அம்பத்தூர், கோயம்பேடு, ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கிறது. அதேபோல், புறநகர்ப் பகுதிகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை நீடிக்கும் என்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News