Rain Situation- தமிழ்நாடு, புதுச்சேரியில் அக்.28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
Rain Situation- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் வரும் 28ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று காலை 10 மணிக்குள், 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Rain Situation, Rain in Tamil Nadu- மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல் அக்.28-ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சனிக்கிழமை நள்ளிரவு மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நகா்ந்து வருகிறது.
இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று திங்கள் முதல் சனிக்கிழமை (அக்.23 முதல் 28) வரை ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மத்திய மேற்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் திங்கள் முதல் புதன்கிழமை வரை 70 கி. மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.23) சூறாவளிக் காற்று 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ள 5 மாவட்டங்கள்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சனிக்கிழமை நள்ளிரவு மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நகா்ந்து வருகிறது.
இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று திங்கள் முதல் சனிக்கிழமை (அக்.23 முதல் 28) வரை ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 10 மணிவரை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.