ரயில்நிலையங்களில் விதிக்கப்பட்ட கொரோனா கால அபராதம் வசூலிப்பு நிறுத்தம்
ரயில்நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ 500 அபராதம் வசூலிக்கும் நடைமுறை திரும்ப பெறப்பட்டது-ரயில்வே நிர்வாகம்
ரயில்நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடைமுறை திரும்ப பெறப்பட்டது - ரயில்வே நிர்வாகம்
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் மாநில அரசுகள் அறிவித்துள்ளது. தமிழக அரசும் பொது இடங்களில் கூடும் மக்கள் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும் என அறிவித்துள்ளது. அப்படி முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமாக 500 ரூபாய் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதாவது இந்திய ரயில்வே எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது 500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடைமுறை திரும்ப பெறப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது