முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ரகுராம்ராஜன் சந்திப்பு
முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ரகுராம்ராஜன், முதலமைச்சரை சந்தித்துப் பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (13.12.2021) தலைமைச் செயலகத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் ரகுராம்ராஜன் சந்தித்துப் பேசினார்.
உடன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இருந்தனர்.