கேள்வி ஒருமுறை, பதிலோ மூன்று முறை: எஸ்கேப் ஆன உதயகுமார்
சசிகலா குறித்த கேள்விக்கு நன்றி வணக்கம்! என்று மூன்று முறை சொல்லிவிட்டு எஸ்கேப் ஆன உதயகுமார்;
மதுரையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவை பொறுத்தவரையில் உயர்நீதிமன்றம், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்கிற தெளிவான தீர்வை வழங்கியிருக்கிறது அதிமுகவினர் அனைவரும் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு மனதாக அதிமுக வெற்றிக்கு உழைப்பதற்கு தயாராக உள்ளனர். அதிமுக ஒற்றுமையாக தான் இருக்கிறது என்று நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது என்று கூறினார்
அப்போது, விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்து செய்தியில், சகோதரத்துவம் மனித நேயம் தலைக்கட்டும். வேற்றுமைகள் களைந்து ஒற்றுமை ஓங்கட்டும். துரோக சிந்தனைகள் அழிந்து உண்மைகள் உயிர் பெறட்டும் என்று சசிகலாசொன்னதை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு உதயகுமார், நன்றி வணக்கம்! நன்றி வணக்க! நன்றி வணக்கம்! என்று மூன்று முறை சொல்லிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார்