ரேசன் கடைகளில் தரமான அரிசி: மண்டல மேலாளர்களுடன் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல தரக்கட்டுப்பாட்டு மேலாளர்களுடன் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-12-15 17:12 GMT

 அனைத்து பொது விநியோகத் திட்ட அங்காடிகளுக்கும் தங்கு தடையின்றி தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல தரக்கட்டுப்பாட்டு மேலாளர்களுடன் அமைச்சர் அர. சக்கரபாணி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு.பிரபாகர், மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



Tags:    

Similar News