ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாட்களில் பொது விடுமுறை அறிவிப்பு
காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாட்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது;
காஞ்சிபுரம் செங்கல்பட்டு ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது விடுபட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ள தமிழ்நாடு சாதாரண ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021-ஐ முன்னிட்டு தேர்தல் நடைபெற உள்ள பகுதிக்கு மட்டும் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.
ஏனைய 28 மாவட்டங்களில் அக்டோபர் 9 அன்று நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளுக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.