IPS Officers Transfer தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 39 போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 4 புதிய டி.ஜி.பி.க்கள் பணி நியமனம் செய்யப்பட்டுளனர். ஐபிஎஸ் அதிகாரிகளான ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய் குமார் சிங் மற்றும் வன்னியபெருமாள் ஆகியோருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏடிஜிபி ராஜீவ்குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக உள்ள அபய்குமார் சிங் அதே துறையின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டான்ஜெட்கோவில் விஜிலன்ஸ் ஏடிஜிபியாக உள்ள வன்னிய பெருமாள், அதே பிரிவில் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சிஐடி 2 பிரிவு காவல் கண்காணிப்பாளராக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் தமிழ்நாடு கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளராக அருண் பாலகோபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர வடக்கு பிரிவு துணை ஆணையராக சரவணன் நியமனம். சென்னையில் மதுவிலக்கு குற்றப்பிரிவு மத்திய நுண்ணறிவுப் பிரிவு கண்காணிப்பாளாராக பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் அமலாக்கப்பிரிவு ஐஜியாக ராதிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர பூக்கடை காவல் துணை ஆணையராக ஸ்ரேயா குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர காவல் துணை ஆணையராக வி.ஆர்.ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் கியூ பிரிவு காவல் கண்காணிப்பாளராக சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவணக் காப்பக காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை நகர் தெற்கு சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக பிரதீப் நியமனம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 7-வது பட்டாலியன் கமாண்டண்ட்டாக ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் சென்னை தெற்குச்சரக ஊழல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளராக சரவணாக்குமாருக்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வினோத் சாந்தாராம் சென்னையில் சிபிசிஐடி 1, சிறப்பு பிரிவுகள் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ்பியாக பதவி உயர்வு பெறும் விஜேய கார்த்திக்ராஜ், சென்னையில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வி.வி.கீதாஞ்சலி எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சென்னையில் சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு ஆர்.பொன் கார்த்திக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி நகர் தெற்கு காவல்துறை துணை ஆணையராக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்குன்றம் துணை ஆணையராக பல்லா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச்செயல் நுண்ணறிவுப் பிரிவு எஸ்பியாக சிறப்பு சிஐடி பிரிவு எஸ்பி எஸ் சரவணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளி துணை இயக்குநராக தீபா சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.