தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க தனிச்சட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மகாராஷ்டிரா போன்று தமிழகத்திலும் ரவுடிகளை ஒழிக்க தனிச் சட்டம் கொண்டுவரப்படும் - முதல்வர் ஸ்டாலின் அதிரடி;

Update: 2022-03-12 16:16 GMT

சென்னையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள்,போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில், நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் டாக்கூரைப் பாராட்டி, முதல்வர் ஸ்டாலின் கேடயம் வழங்கினார். 

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ள 3 நாட்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் தொடர்பாக பேசினார். நிறைவு நாளான இன்று தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிரா போன்று தமிழகத்திலும் ரவுடிகளை ஒழிக்க தனிச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் குற்றம் புரிவோருக்கு அலுவலர்கள் உடந்தையாக இருக்கக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்தார்.

Tags:    

Similar News