உங்க ரேஷன் கார்டுகளுக்கு எந்த பொருள்? என்ன விலை?

Ration Shop Items Prices-குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விநியோக விலை மற்றும் வழங்கல் அளவு விவரம் தெரிந்துகொள்வோம்.

Update: 2022-02-24 03:32 GMT

Ration Shop Items Prices

Ration Shop Items Prices-தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் குறிக்கோள், எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் ஆகும். அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது.

அத்தியாவசியப் பொருட்களின் விநியோக விலை மற்றும் வழங்கல் அளவு விவரம் :

வ.

எண் 

       பொருள்கள்          

   விற்பனை விலை (கிலோ / லிட்டர் ஒன்றுக்கு)          

விநியோக அளவு

1

அரிசி

01.06.2011 முதல் விலையில்லா அரிசிவழங்கப்பட்டு வருகிறது.

01.11.2016 முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 ன்படிஅனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 யூனிட் 12கிலோ, 1.5 யூனிட் 14கிலோ, 2 யூனிட் 16கிலோ, 2.5 யூனிட் 18கிலோ 3 மற்றும் 4 யூனிட் 20கிலோ, 5 யூனிட் மற்றும் அதற்கு மேல் கூடுதலாக உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5கிலோ வீதம் அதிகப்படுத்தி வழங்கப்படுகிறது. அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, குடும்ப அட்டை ஒன்றுக்கு தலா 35 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது.

2

சர்க்கரை

ரூ.13.50/ கிலோ

ரூ.25.00/ கிலோ

அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு 500 கிராம் வீதம் அதிகபட்சமாக 2 கிலோவும், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக கூடுதலாக 3 கிலோ சர்க்கரையும் வழங்கப்படுகிறது. அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகள் தவிர இதர சர்க்கரை பெற தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

3

கோதுமை

01.02.2017 முதல் விலையில்லாமல் வழங்கப்படுகிறது

மாவட்டத் தலைமையகம் மற்றும் சென்னை நகரத்தில் உள்ள அட்டைகளுக்கு அட்டை ஒன்றுக்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோகிராம். மற்றும் மற்ற பகுதியில் உள்ள அட்டைகளுக்கு அட்டை ஒன்றுக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோகிராம் (இந்திய அரசால் கோதுமை குறைந்த அளவு மட்டுமே வழங்கப்படுவதால், அட்டைதாரர்களுக்கு பொருட்கள் இருப்பில் இருக்கும் தன்மை பொறுத்து வழங்கப்படும்)

4

மண்ணெண்ணை

லிட்டர் ஒன்றுக்கு 13.60 முதல் 14.20 ரூபாய்

இருப்பிடம் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு அட்டைக்கு 3 முதல் 15 லிட்டர்

5

துவரம் பருப்பு

ஒரு கிலோ ஒன்றுக்கு ரூ.30./- வீதம்

குடும்ப அட்டை ஒன்றுக்கு துவரம் பருப்பு தலா ஒரு கிலோ வீதம் வழங்கப்படுகிறது.

6

பாமாயில்

ஒரு கிலோ ஒன்றுக்குரூ.25./- வீதம்

குடும்ப அட்டை ஒன்றுக்கு பாமாயில் தலா ஒரு கிலோ வீதம் வழங்கப்படுகிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News