தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மொத்தம் உள்ள 5 அலகுகள் மூலம் மொத்தம் 1050-மெகாவாட் மின்சாரம் நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. சமீப நாட்களாக நிலக்கரி தட்டுபாடு காரனமாக அனல்மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளையும் தொடர்ச்சியாக இயக்க முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் சில நாட்களாக அனைத்து அலகுகளும் யூனிட்கள் முழுமையாக இயக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் நான்கு அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு இன்று காலை முதல் ஒரு அலகில் மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் 840 -மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு அலகில் மட்டும் 210 -மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சுமார் 80- ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் ஆனால் அதனை வைத்து தொடர்ச்சியாக அனைத்து அலகுகளையும் இயக்க முடியாத காரணத்தால் அதிகப்படியான நிலக்கரி கையிருப்பு வரும் வரையில் ஒரு அலகை மட்டும் இயக்க திட்டமிட்டுள்ளதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.