தமிழத்தில் விரைவில் மின்வெட்டு-பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அபாய அறிவிப்பு
தமிழத்தில் விரைவில் மின்வெட்டு வரும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார்.;
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னை தியாகராய நகரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசு செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. தரமற்ற மின் சப்ளை நிறுவனங்களுக்கு அவர்கள் ஆர்டர் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு வரும்.
எனவே பொதுமக்கள் ஜெனரேட்டர், யு பி.எஸ். கருவிகளை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. 2006ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை இருந்தது போன்ற ஒரு நிலை மீண்டும் வரும் .எனவே மக்கள் அதனை சமாளிக்க இப்போதே தயாராகிக் கொள்ள வேண்டும் என்றார்.