ஜெய்பீம் பட இயக்குனர், நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு
ஜெய்பீம் பட இயக்குனர், நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு;
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் சந்தோஷ்(27), இவர் ஸ்ரீ ருத்ர வன்னியர் சேனா என்ற அமைப்பின் நிறுவன தலைவராக உள்ளார்.
இவர் வேளச்சேரி காவல் நிலையத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னிய மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், கொச்சை படுத்தும் வகையிலும் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவை இழிவுபடுத்தும் வகையிலும் காட்சிகள் அமைந்திருப்பதாக கடந்த 8-11-2021 அன்று புகாரளித்திருந்தார்.
புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்ககோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தை நாடியிருந்தார். கடந்த 29ம் தேதி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட நிலையில் இன்று வேளச்சேரி போலீசார் ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா மீது இன உணர்வுகளை தூண்டியதாக 295(A) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.