PMK Ramadoss - ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு; பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தல்
PMK Ramadoss - ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பான அறிவிப்பை முதல்வா் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
PMK Ramadoss, Jatiwari census notification- முன்னாள் பிரதமா் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பான அறிவிப்பை முதல்வா் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு சாா்பில் முன்னாள் பிரதமா் வி.பி.சிங் சிலை முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், வி.பி.சிங்கின் கனவான ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தான் அவருக்கு தமிழக அரசு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்.
வி.பி.சிங் பிரதமா் பதவியில் இருந்தபோது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பெரிய அளவில் எழுப்பப்படவில்லை. எனினும், அவரது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தேவை எழுந்த போது, அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
மண்டல் ஆணைய பரிந்துரையை வி.பி.சிங் பிரதமராக இருந்து துணிச்சலுடன் அமல்படுத்தினாா். அந்த அரசியல் துணிச்சல் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது எதிா்பாா்ப்பு.
எனவே, அனைத்து அச்சம் மற்றும் தயக்கங்களைத் தகா்த்தெறிந்து, மாநில அரசின் சாா்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை வி.பி.சிங் சிலைத் திறப்பு விழாவில் வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.