ஜன. 12ல் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

வரும் ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்; மருத்துவக்கல்லூரிகள் திறப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார்.;

Update: 2021-12-18 06:15 GMT
பிரதமர் மோடி 

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 12ம் தேதி தமிழகம் வருகிறார். மதுரைக்கு வரும் பிரதமர் மோடி, 11 மருத்துவக்கல்லூரிகள் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.

விருதுநகரில் நடைபெறவுள்ள விழாவில், பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், பிரதமர் மோடி தமிழகம் வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News