மல்யுத்தப்போட்டியில் வெண்கலம் வென்ற மோஹித் கிரேவாலுக்கு பிரதமர் வாழ்த்து
Commonwealth Games Indian Players - காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தத்தில் 125 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மோஹித் கிரேவாலுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
பிரதமர் நரேந்திர மோடி.
Commonwealth Games Indian Players -காமன்வெல்த் போட்டிகளில் மல்யுத்தத்தில் 125 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மோஹித் கிரேவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தனது டுவிட்டர் பதிவில், "நமது மல்யுத்த வீரர்களின் செயல்திறன் வியப்பூட்டுகிறது! பட்டியலில் மோஹித் கிரேவாலால் மேலும் ஒரு பதக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளதன் வாயிலாக அவரது கூரிய கவனம் எடுத்துரைக்கப்படுகிறது. அவருக்கு நல்வாழ்த்துகள். வருங்காலத்தில் மேலும் பல புதிய வெற்றிகளை அவர் குவிப்பார் என்று நம்புகிறேன்." என தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2