6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரமாகத் தடை: தமிழக அரசு

6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரமாகத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Update: 2023-03-11 15:45 GMT

பைல் படம்.

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளுக்கு ஏற்கனவே 60 நாட்களுக்குத் தடை செய்து தமிழக அரசு அரசாணையைப் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தற்போது நிரந்தமாகத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தடை செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பூச்சிக் கொல்லி மருந்து குறித்து உயர்மட்டக் குழு, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடை செய்யப் பரிந்துரைத்துள்ளது. அதன் அப்படையில் குறிப்பிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. அசிபேட், ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிஃபோஸ் சைபர்மெத்ரின் மற்றும் குளோர்பைரிபாஸ் உள்ளிட்ட 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News