பெரியார் பல்கலைக்கழக ஆன்லைன் படிப்புகளில் மாணவர்கள் சேரவேண்டாம் : யூ.ஜி.சி எச்சரிக்கை
பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு யூ.ஜி.சி. அறிவித்துள்ளது.;
நாடுமுழுவதும் தொலைதூர கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. அதன் அடிப்படையில் உரிய அனுமதி பெற்றே பிறகே தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது யுஜிசி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உரிய அனுமதிபெறாமல் தமிழகத்தின் சேலம் பெரியார் பல்கலைக்கழம் ஆன்லைன் படிப்புகளையும், தொலைதூரக்கல்வி படிப்பையும் நடத்தி வருவதாக தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் யாரும் நடப்பு கல்வியாண்டில் பெரியார் பலைகலைக்கழகம் நடத்தும் தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேரவேண்டாம் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தமிழக உயர்கல்வித்துறைக்கும், தமிழக ஆளுநருக்கும் யூஜிசி கடிதம் அனுப்பியுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை என ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.