விமானக் கட்டணம் உயர்வு : பயணிகள் அதிர்ச்சி

விமான கட்டணம் சுமார் மூன்று மடங்கு உயர்ந்திருப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்;

Update: 2023-04-22 06:54 GMT

கோப்புப்படம் 

சென்னையில் இருந்து கோவை, தூத்துக்குடி, மதுரை செல்லும் விமானங்களுக்கான கட்டணம் சுமார் மூன்று மடங்கு உயர்ந்திருப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை விடுமுறை, ரம்ஜான் பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் கார்களின் பயணிப்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனை பயன்படுத்தி விமான நிறுவனங்கள், டிக்கெட் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தி உள்ளன.

சென்னையில் இருந்து வழக்கமாக தூத்துக்குடிக்கு ரூ. 3,685 கட்டணம் இருக்கும்.  ஆனால் தற்போது கட்டணம் 10,000 ரூபாயை தாண்டி இருக்கிறது.

இதேபோன்ற நிலைமையே சென்னை, மதுரை, கோவை செல்லும் விமானங்களுக்கும் நீடிக்கிறது. தொழில் நகரமான கோவைக்கு ஏழு விமானங்கள் வரை சென்னையில் இருந்து விடப்படுகின்றன. இதுவரை ரூ. 3,400 என்கிற அளவில் இருந்து வந்த விமானக்கட்டணம், தற்போது 5,600 முதல் 12,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு செல்வதற்கான கட்டணம்  ரூ. 8,500 முதல் ரூ.10,000 வரை அதிகரித்துவிட்டது. இந்த திடீர் கட்டண உயர்வால் விமான பயணிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

Tags:    

Similar News