ஊராட்சித்துறை பணிகள்: காணொலி மூலம் மத்திய மாநில அமைச்சர்கள் ஆலோசனை

புது டில்லியிலிருந்து மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கிரி ராஜ் சிங் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.;

Update: 2022-02-25 09:22 GMT

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணிகள் குறித்து காணொலி வாயிலாக புது டில்லியிலிருந்து மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கிரி ராஜ் சிங் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் கலந்துகொண்டார்.

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கிரிராஜ்சிங் தலைமையில் இன்று தென்மாநிலங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர்.பெரியகருப்பன் அவர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான வழிகாட்டுதலில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 15 வது நிதிக்குழு மானிய பணிகள் தேசிய கிராம சுயாட்சி திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் கிராம சபைகளின் சிறப்பான செயல்பாடு, சுவமித்வா திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் சிறந்த செயல்பாடு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சி மற்றும் முன்னோடி செயல்பாடுகள் மற்றும் நிலைத்த நீடித்த வளர்ச்சி இலக்குகள் ஆகியவற்றை குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்.

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கிரிராஜ்சிங் தமிழ்நாட்டின் செயல்பாட்டினை பாராட்டியதுடன் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற கட்டிடங்கள், இணைய வழி செயல்பாடு ஆகியவற்றை நிறைவேற்றவும் கேட்டுக் கொண்டார்.

இக்காணொலி வாயிலான ஆய்வு கூட்டத்தில் மத்திய அரசின் ஊராட்சித் துறை உயர் அலுவலர்கள், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு செயலர் பெ.அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News