இனி ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல், ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.;

Update: 2022-05-27 15:15 GMT

தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், ஆண்டுக்கு 4 முறை கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலைச்சர் மு.க. ஸ்டாலின், விதி எண் 110ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் இனி ஆண்டிற்கு 6 முறை நடைபெறும் என்று கூறினார்.

அதன்படி, இனி ஜனவரி 26, குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி பிறந்த தினம் ஆகிய நாட்களுடன், மார்ச் 22 - உலக தண்ணீர் தினம், நவ.1 - உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். இதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News