அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு சிறப்பு சலுகை-போக்குவரத்துத்துறை
அரசுப் பேருந்துகளில் படுக்கை வசதிகள் கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கென இட ஒதுக்கீடு செய்து போக்குவரத்துத்துறை உத்தரவு;
அரசுப் பேருந்துகளில் படுக்கை வசதிகள் கொண்ட குளிர்சாதனம்/ குளிர்சாதனமில்லா பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்து போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படுக்கை வசதிகள் கொண்ட குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் போதே 1LB, 4LB ஆகிய படுக்கைகளை பெண்களுக்கென ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் பயணிகள் யாரும் முன்பதிவு செய்யாத போது அதனை பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து கொள்ளலாம் எனவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
எனினும், பேருந்து புறப்படும் இறுதி நேரம் வரையில் அந்த இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.