அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி காலமானார்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி சில வாரங்களாக உடல்நலமின்றி இருந்தார்;
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை பல்லாவரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று சிகிச்சைபலனின்றி காலமானார்.