மீண்டும் கட்சி பொறுப்பு – ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கையால் மீண்டும் பரபரப்பு

OPS statement to party functionaries about takes charge - கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், தொகுதிக் கழக செயலாளர்கள் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்

Update: 2022-07-23 14:46 GMT

OPS statement to party functionaries about takes charge - மீண்டும் கட்சி பொறுப்பு – ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கையால் மீண்டும் பரபரப்பு

OPS statement to party functionaries about takes charge - அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்டு உள்ள கடிதத்தால், அதிமுக தொண்டர்களிடையே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் அவர்களது வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்.

OPS statement to party functionaries about takes charge -மேலும் ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி கழகச் செயலாளர் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்கள் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் மீண்டும் அந்தந்தப் பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதையும், காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், தொகுதிக் கழக செயலாளர்கள் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பழனிச்சாமி அதிர்ச்சி : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான பிரிவு, அண்ணன் - தம்பி பிரிவு போல தான். ஓ.பன்னீர்செல்வம் மனம் திரும்பி வந்தால் ஏற்போம்,'' என, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்துத் தெரிவித்து உள்ளார். இந்த கருத்து, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு அதிர்ச்சி அளித்து உள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News