14 மாவட்ட செயலாளர்கள் நியமனம் : ஓ.பி.எஸ். அதிரடி உத்தரவு

O.Panneerselvam appoints 14 district secretaries - அதிமுகவில் யார் தலைமை என்பதில் கடும்போட்டி நிலவி வரும் நிலையில், ஓ. பன்னீர்செல்வம், 14 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அதிரடி காட்டி உள்ளார்.

Update: 2022-07-24 11:08 GMT

O.Panneerselvam appoints 14 district secretaries - 14 மாவட்ட செயலாளர்களை நியமித்து ஓ.பி.எஸ். அதிரடி உத்தரவு

O.Panneerselvam appoints 14 district secretaries - அதிமுகவில் யார் தலைமை என்பதில் கடும்போட்டி நிலவி வரும் நிலையில், ஓ. பன்னீர்செல்வம், 14 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அதிரடி காட்டி உள்ளார்.

இதுதொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, இராமநாதபுரம் மாவட்ட செயலராக ஆர். தர்மரும், கோவை மாநகர் மாவட்ட செயலராக கோவை செல்வராஜும், மதுரை மாநகர் மாவட்ட செயலராக முன்னாள் எம்.பி., ஆர்.கோபாலகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

O.Panneerselvam appoints 14 district secretaries - வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலராக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும், சென்னை புறநகர் மாவட்ட செயலராக வெங்கட்ராமனும், எம்.எம்.பாபு தென்சென்னை மேற்கு மாவட்ட செயலராகவும், அம்பிகாபதி தென் சென்னை வடக்கு மாவட்ட செயலராகவும், ரமேஷ் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ராஜ்மோகன் திருச்சி புறநகர் மாவட்டசெயலராகவும், மதியழகன் வடசென்னை தெற்கு( மேற்கு) மாவட்ட செயலராகவும், அசோகன் சிவகங்கை மாவட்ட செயலராகவும், ரஞ்சித் குமார் காஞ்சிபுரம் மாவட்ட செயலராகவும், சிவலிங்கமுத்து திருநெல்வேலி புறநகர மாவட்ட செயலராகவும், தவசி தென்காசி தெற்கு மாவட்ட செயலராகவும், நியமிக்கப்பட்டு உள்ளனர்.

O.Panneerselvam appoints 14 district secretaries - புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலர்களுக்கு கழக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம் என்று ஓபிஎஸ் நேற்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News