வெங்காயம் விலை குறையும்: மத்திய அரசு

கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விற்பனை செய்வதன் மூலம் விலையை கட்டுக்குள் வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-10-18 14:36 GMT

காய்கறிகளின் விலை உயர்வுக்கு மத்தியில், கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விற்பனை செய்வதன் மூலம் விலையை கட்டுக்குள் வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, அக்டோபர் 14 அன்று மெட்ரோ நகரங்களில் சில்லறை வெங்காய விலை கிலோவுக்கு 42-57 ரூபாயாக இருந்தது. சில்லறை விற்பனை சந்தைகளில், வெங்காயம் சென்னையில் கிலோ ரூ. 42 ஆகவும், டெல்லியில் கிலோ ரூ .44 ஆகவும், மும்பையில் கிலோ ரூ .45 ஆகவும், கொல்கத்தாவில் கிலோ ரூ .57 ஆகவும் இருந்தது

முந்தைய மாதத்தை விட விலை உயர்ந்து வரும் மாநிலங்களுக்கு கையிருப்பில் உள்ள வெங்காயத்தை அளித்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. 2021-22 இல், 2021 குறுவை சாகுபடி மூலம் 2021 ஏப்ரல் முதல் ஜூலை 2021 வரை சுமார் 2.08 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பு வைக்கப்பட்டது.

அக்டோபர் 12 வரை, டெல்லி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, கவுகாத்தி, புவனேஷ்வர், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, மும்பை, சண்டிகர், கொச்சி மற்றும் ராய்பூர் போன்ற முக்கிய சந்தைகளில் மொத்தம் 67,357 டன் வெளியிடப்பட்டுள்ளது.

தக்காளி மற்றும் உருளைக்கிழங்கின் விலையை குறைப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. தக்காளி சராசரி அகில இந்திய சில்லறை விலை கிலோவுக்கு 41.73 ஆகவும், உருளைக்கிழங்கு கிலோ 21.22 ஆகவும் இருந்தது. அதேசமயம், மொத்த சந்தைகளில் உருளைக்கிழங்கு விலை குவிண்டாலுக்கு ரூ .1,606.46 ஆகவும், தக்காளி குவிண்டாலுக்கு ரூ .3,361.74 ஆகவும் இருந்தது.

டெல்லியில், டெல்லியில் உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ. 20 மற்றும் ரூ .56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News