பெரியார் அம்பேத்காரிய நெறிகளை போதித்து வந்த ஆனைமுத்து காலமான தினமின்று
இளைஞர்களைப் பெரியாரிய நெறியோடு மார்க்சிய, அம்பேத்காரிய நெறிகளையும் போதித்து வந்தவர் வே. ஆனைமுத்து;
பகுத்தறிவு தந்தை பெரியாரின் அடியொற்றி அவரது சுயமரியாதைப் பாதையில் பெரியாரிய நெறியில் தனது இயக்கத்தைக் கட்டமைத்து ஆண்டுதோறும் சுயமரியாதை உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தி இளைஞர்களைப் பெரியாரிய நெறியோடு மார்க்சிய, அம்பேத்காரிய நெறிகளையும் போதித்து வந்தவர்.
மண்டல் கமிஷன் அடிப்படையில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதில் இவரது பங்களிப்பு முக்கியமானது. பெரியாரிய சிந்தனைகளை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வடமாநிலங்கள் முழுவதும் கூட்டங்கள் நடத்தி இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன்ராம், வி.பி.சிங், கன்ஷிராம் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து வலியுறுத்தியவர் ஆனைமுத்து.