சென்னை - பாண்டிச்சேரிக்கு ஒரு நாள் சுற்றுலா.. சுற்றுலாத்துறை ஏற்பாடு
சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு ஒரு நாள் சுற்றுலாவாக பார்த்து ரசிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 115 தகவல் நிலையங்கள், 42 பயணியர் அலுவலகங்கள், 50 செய்தி நிறுவனங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. புதுடில்லி, சென்னை, ராமேஸ்வரம் முதலான நகரங்களில் இதன் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு சென்னையில் ரூ.2 கோடி செலவில் சுற்றுலா தகவல் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்த செலவில் தங்கும் வசதிகளைச் செய்து வருகிறது. பயணிகளைப் பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டங்கள் திட்டி செயல்படுத்துகிறது. 26 வகையான சுற்றுலாக்களை நடத்தி வருகிறது. 'தமிழ்நாடு உணவு விடுதி' என்ற பெயரில் புகழ்பெற்ற சுற்றுலா மையங்களில் உண்ணும் விடுதிகளையும் தங்கும் விடுதிகளையும் கட்டி சேவை செய்து வருகிறது. இக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 36 தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றுள் நட்சத்திர தகுதபெற்ற ஓட்டல்கள் ஐந்து உள்ளன. இவன முறையே மதுரை, கோயம்புத்தூர், ஒனேக்கல், ஏற்காடு ஆகிய இடங்களில் உள்ளன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தகவல் மையம் மற்றும் விற்பனைக்கூடம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் மைய நூலகத்தில் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த மையம் தொடங்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல்கள் இங்கு கிடைக்கலாம். சுற்றுலா கையேடுகள் பிரதிகள், வரைபடங்களும் கிடைக்கும். சுற்றுலாவுக்கான பயணச்சீட்டுகள் முன்பதிவு வசதியும் இங்கு உண்டு.
சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு அதிக செலவில்லாமல் ஒரே நாளில் சுற்றிப் பார்க்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கு கழகம் ஒரு நாள் சுற்றுலாவை நீண்ட நாட்களாக செயல்படுத்தி வருகிறது. இந்த ஒரு நாள் சுற்றுலாவை முன்பதிவு செய்தால் குளிர்சாதனப் பேருந்தில் புதுவையின் அணைத்து சுற்றுலாத் தலங்களையும் சுற்றி பார்த்துவிட்டு திரும்பலாம்.
ஒரு நாள் சுற்றுலா:
காலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பு்.
குளிர்சாதனப் பேருந்தில் டிவி பார்த்துக் கொண்டே ஆனந்தமான பயணத்தில் காலை 9.00 மணிக்கு புதுவையை அடையும்.
முதலில் உலகப்புகழ்பெற்ற ஆரோவில் நகரத்தை சுற்றிப் பார்த்தல்
அடுத்ததாக புதுவையின் புகழ்பெற்ற அரவிந்தர் ஆசிரம்.
மணக்குள விநாயகர் கோவில்
புதுவை கடற்கரை, புதுவை அருங்காட்சியகம்
பிரெஞ்சு கட்டிடக்கலை மற்றும் ஷாப்பிங்
சென்னைக்கு வரும் வழியில் இருக்கும் முதலியார்குப்பம் படகு குழாம் போட்டிங்
சென்னைக்கு திரும்புதல்.
இரவு 8 மணிக்கு சென்னை
கட்டணம்:
ஒரு நாள் சுற்றுலா செல்ல விரும்புவோர் ஏ.சி பேருந்து கட்டணம் ஒரு ஆளுக்கு ரூ.1020 ஆகவும், சாதாரண பேருந்தின் கட்டணம் ரூ.850 ஆகவும், வோல்வோ ஏ.சி பேருந்தில் கட்டணம் ரூ.1300 ஆகவும் வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தில் எல்லா இடத்திற்கும் செல்லும் நுழைவுக் கட்டணம், போட்டிங் கட்டணம் ஆகியவை அடங்கும். உணவை நாம் நம் செலவில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.