வைகுண்ட ஏதாதசியையொட்டி பூக்களின் விலை பல மடங்கு உயர்வு
வைகுண்ட ஏகாதசியையொட்டி பூக்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற விழாவாக வைணவ கோயில்களில் மார்கழி மாத சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம், மதுரை கள்ளழகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றன.
கடந்த பல நாட்களாகவே பூக்களின் விலை கிலோ 2 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்துவரும் நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வரும் நிலையில் பூக்களின் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் பெரும்பாலான பூக்களின் வரத்து தற்போது குறைந்துள்ளது. இதனால் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
மல்லிகை கடந்த வாரம் ரூ.1000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.1000 அதிகரித்து ரூ.2,000 மாகவும், சம்பங்கி பூ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 50 ரூபாய் அதிகரித்து 200 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 70 ரூபாய் அதிகரித்து 170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரளிப்பூ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 250 அதிகரித்து 350 ரூபாய்கும், கனகாம்பரம் 700 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 800 அதிகரித்து 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாமந்திப்பூ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 50 ரூபாய் அதிகரித்து ரூ.150க்கும், குண்டு மல்லி 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் இன்று 200 அதிகரித்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சாக்லேட் ரோஸ் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் இன்று 50 அதிகரித்து 150 ரூபாய்க்கும், கனகாம்பரம் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் இன்று 800 ரூபாய் அதிகரித்து 1500 ரூபாய்க்கு விற்பனை சய்யப்படுகிறது.
பன்னீர் ரோஸ் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 60 அதிகரித்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.