கொரோனா வார்டில் பணியாற்றிய நர்ஸ் கொரோனாவால் உயிரிழப்பு..!

வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றிய நர்ஸ்கொரோனாவால் உயிரிழப்பு.;

Update: 2021-06-08 12:10 GMT

வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் ஆரூண் சுந்தர்ராஜ். இவருடைய மனைவி சாந்தகுமாரி (வயது51). வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த 14-ந்தேதி சாந்தகுமாரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சாந்தகுமாரி பரிதாபமாக இறந்தார். சாந்தகுமாரியின் சொந்த ஊர் திருத்தணி ஆகும். இறந்த நர்சு சாந்தகுமாரிக்கு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நர்சுகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே குடியாத்தம், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 2 நர்சுகள் இறந்தனர். 3-வதாக சாந்தகுமாரி பலியாகி உள்ளார்.

Tags:    

Similar News