தமிழகத்தில் வரும் டிசம்பர் 29 ம் தேதி முதல் ஜனவரி 4 ம் தேதி வரை வட கிழக்கு பருவ மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
பொதுவாக இந்த ஆண்டு தமிழகத்தில் நிவர்,புரெவி போன்ற புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. குளிர்காலம் தொடங்கிய பின்னரும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள தகவல்படி,வடகிழக்கு பருவ நிலை காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். மேலும் வடகிழக்கு பருவ மழை டிசம்பர் 29 ம் தேதி முதல் ஜனவரி 4 வரை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.