ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் கிடையாது - தமிழக அரசு அறிவிப்பு

ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-10-30 13:17 GMT

தலைமை செயலகம்

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை நீக்கும்  அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்

அதன்படி, ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், 

ஓய்வு பெறக்கூடிய ஊழியர்கள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்போது ஓய்வூதிய பலன்களை பெறமுடியாத சூழ்நிலை உருவாகிறது. எனவே, ஓய்வு பெறும் நாளன்று நடவடிக்கை எடுப்பதை விட அதற்கு முன்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால், ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்படும் நடைமுறை தவிர்க்கப்படும்

Tags:    

Similar News