ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை ரத்து: பள்ளிக்கல்வித்துறை
ஆசிரியர்களுக்கும் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் அந்த விடுப்பை எடுக்காமல், அந்நாட்களில் பணிக்கு வந்த ஊழியர்கள், அதற்கான ஊதியத் தொகையை பணமாக பெற்றுக்கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர்கள், ஆசிரியரில்லா பள்ளி பணியாளர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்களுக்கும் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது எனக் தெரிவித்துள்ளது