தமிழ்நாட்டின் புதிய டிஜிபி சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி சைலேந்திரபாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு விடைபெற்றார் திரிபாதி.புதிய டிஜிபி சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்.
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி சைலேந்திரபாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு விடைபெற்றார் திரிபாதி.புதிய டிஜிபி சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்.
தமிழகக் காவல்துறையில் உயரிய பதவி, சட்டம்- ஒழுங்கு டிஜிபி பதவி. தீயணைப்புத் துறை, சிபிசிஐடி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சிறைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என பல டிஜிபிக்கள் பதவியில் இருந்தாலும் அனைத்திற்கும் தலையாயப் பதவி சட்டம்- ஒழுங்கு டிஜிபி அல்லது காவல்துறை தலைமை இயக்குநர் பதவி. இதை ஹெட் ஆஃப் தி போலீஸ் ஃபோர்ஸ் (HOPF) என்றும் அழைக்கிறார்கள்.
புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு 1987ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி சட்டம் - ஒழுங்கு பிரிவிலும் அதிக அனுபவம் உள்ளவராவார். புதிய டிஜிபியாக பொறு்ப்பேற்ற சைலேந்திரபாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு விடைபெற்றார் திரிபாதி.