தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் 46 சிறப்பு ரயில்களின் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றம்
தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் 46 சிறப்பு ரயில்களின் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரயில் சேவைகள் முழுவதும் இயங்க சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மேலும் தற்போது மக்களின் நலன் கருதி சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்கி வருகிறது. தமிழகத்தில் சுமார் ஒரு ஆண்டு காலமாக சாதாரண பயணிகள் ரயில் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக வருகிற 21ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கில் இருந்து ரயில் சேவைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் தங்களது வீட்டில் இருந்து ரயில் நிலையங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் 46 சிறப்பு ரயில்களின் புறப்படும் மற்றும் சேரும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது அது குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியதாவது, மன்னார்குடி-சென்னை எழும்பூர் ரயில் வருகிற ஜூன் 17ம் தேதி முதல் நீடாமங்கலத்தில் இரவு 10.52க்கு வந்து சேர்ந்து 10.55க்கு புறப்படும் என்று தெரிவித்தது. அதேபோல் காரைக்கால்-எர்ணாகுளம், சிறப்பு ரயில் வருகிற ஜூன் மாத 17ஆம் தேதி முதல் மாலை 4.30க்கு புறப்பட்டு திருவாரூருக்கு மாலை 5.32க்கு வந்து சேரும் என்றும் தெற்கு ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.