சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்🔥

Update: 2021-06-12 06:37 GMT

சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்🔥

உலக குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையில் 12 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். இது இந்தியாவில் இப்பிரச்னை எந்தளவு மோசமாக உள்ளது என்பதையே காட்டுகிறது. பெரும்பாலான குழந்தைகள் குடும்ப வறுமை காரணமாகவும், சிலர் வற்புறுத்தல் காரணமாகவும் இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து குழந்தைகளும் கல்வியறிவு பெறுவதை ஒவ்வொரு அரசும் உறுதி செய்ய வேண்டும். சில குழந்தைகள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்கின்றனர். முதலில் இக்குழந்தைகளின் பெற்றோர்களின் வருமானத்துக்கு அரசு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும். வறுமை ஒழிந்து, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வசதி கிடைத்தால் குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்து விடலாம்.

இன்றைய தினம்...

"கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன். தமிழகத்தை குழந்தை தொழிலாளார்கள் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன்'' என குழந்தை தொழில் முறை எதிர்ப்பு உறுதிமொழியை அனைத்து தனியார் மற்றும் அரசுத் துறை அலுவலக நிர்வாகிகளும் ஊழியர்களும் எடுத்துக் கொள்ளவேண்டும் .

Similar News