தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே, ஜூன் மாதங்களில் இருமடங்கு அரிசி வழங்க உத்தரவு.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே, ஜூன் மாதங்களில் இருமடங்கு அரிசி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா 2வது அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கடையில் கூடுதல் அரிசி வழங்கப்படும் என்றும், மே, ஜூன் மாதத்தில் ஏற்கனவே வழங்கப்படும் அளவுடன் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு கூடுதல் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.