பெரம்பலூர் அருகே கணவன், மனைவி கழுத்தறுத்து கொலை, கொள்ளைக்கும்பல் வெறிச் செயல்
பெரம்பலூர் அருகே கொள்ளைக்கும்பல் கணவன் மனைவி இரண்டுபேரையும் கழுத்தறுத்து கொலை செய்த கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அல்லிநகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி அவரது மனைவி அறிவழகி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
இன்று நீண்ட நேரமாக இருவரும் வெளியில் வராததை கண்டு அருகில் இருந்தவர்கள் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர்.அப்போது கணவன் மனைவி இருவரும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட அறிவழகியின் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தாலி செயின் உள்ளிட்ட நகைகள் திருடு போயுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் இது நகை பணத்துக்காக நடந்த கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நகை பணத்துக்காக. கொள்ளைகும்பலால் கணவன் மனைவி இருவரும் கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் அல்லிநகரம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.