விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது

Update: 2021-06-07 06:13 GMT

விவசாயிகளுக்கு  ஓய்வூதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டின் விவசாயிகளுக்கு அவர்களின் ஓய்வு காலத்தில் உதவும் விதமாக மாத ஓய்வூதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டில் விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வை முன்னேற்றுவதற்கும் மத்திய அரசு பல திட்டங்கள் மற்றும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. 2018ம் ஆண்டு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. சுமார் 11 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

தற்போது நாட்டின் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருவதால் விவசாயிகள் மேலும் பயனடையும் விதமாக பல சலுகைகளையும் அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் தங்களின் ஓய்வு காலத்தில் பயனடையும் விதமாக ரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தில் மாதம் ரூ.3,000 ஓய்வூதியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பதிவு செய்தவர்களும், இந்த கிசான் மந்தன் திட்டத்தில் மூலம் பயனடையலாம்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளும் இந்த மந்தன் திட்டத்தில் பயனடைவார்கள். இரண்டு ஹெக்டேர் நிலத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். 18 வயது நிரம்பிய விவசாயிகள் இந்த திட்டத்தில் மாதம் ரூ.55ம், 30 வயது விவசாயிகள் மாதம் ரூ.1,000ம் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும். இவர்கள் தங்கள் ஓய்வு காலத்தில் மாதம் ரூ.3,000 பென்ஷன் தொகையாக பெற முடியும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Similar News