இ - பதிவு இணையம் முடங்கியது

எலக்ட்ரீசியன், பிளம்பர், கம்யூட்டர் ரிப்பேர் , மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள், போன்றோர்களுக்கு இ பதிவு செய்ய அனுமதி...

Update: 2021-06-07 05:26 GMT

இ-பதிவு முறையில் சுயதொழில் செய்பவர்களுக்காக புதிய பிரிவு சேர்க்கப்பட்டு எலக்ட்ரீசியன், பிளம்பர், மெக்கானிக் உள்ளிட்ட சுயதொழில் செய்பவர்கள் இனி விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சார்பில் நேற்று இரவு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எலக்ட்ரீசியன், பிளம்பர், கம்யூட்டர் ரிப்பேர் , மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள், போன்றோர்களுக்கு இ பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் விண்ணப்பிக்கும் காரணமாக இ - பதிவு இணையம் முடங்கியது.

அப்டேட் 

இ-பதிவு இணையம் முடக்கம் -அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்.

ஒரே நேரத்தில் இன்று 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது; இன்று மாலைக்குள் சீராகும் என்று அமைச்சர் விளக்கம்.

Tags:    

Similar News