அரக்கோணம் அருகே கரும்பு தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Update: 2021-06-05 12:17 GMT

அரக்கோணம் அருகே கரும்பு தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

அரக்கோணம் அருகே கரும்பு தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்; அச்சத்தில் கிராம மக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் கிராம கரும்பு தோட்டத்தில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாடுவதாக கூறி பொதுமக்கள் மகுந்த அச்சத்தில் உள்ளர்கள். வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்கள்.

அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம் திருவள்ளூர் மாவட்ட எல்லையை ஒட்டி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது.

பெருங்களத்தூர் கிராமத்தில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட்டுள்ளனர்கள். இந்த கரும்பு தோட்டத்தில் அடிக்கடி சிறுத்தை நடமாடுவதாக விவசாயிகள் அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி மற்றும் வட்டாட்சியர் பழனிராஜனிடம் தெரிவித்தனர்கள்.

இதனையடுத்து இன்று சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி வட்டாட்சியர் பழனிராஜன் மற்றும் ராணிப்பேட்டை வனத்துறையினர் நேரில் சென்று கரும்பு தோட்டம் மற்றும் வயல்வெளிகளில் பார்வையிட்டனர்கள். அப்போது சிறுத்தையின் காலடி தடம் கண்டறியப்பட்டது.

வருவாய் துறையினர் சார்பில் கிராமத்தில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிய நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்கள்.

Similar News