எஸ்டிபிஐ கட்சி சார்பாக நெல்லை அரசு மருத்துவ மனையில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது

Update: 2021-06-05 10:47 GMT

எஸ்டிபிஐ கட்சி

பர்கிட்மாநகரம் எஸ்டிபிஐ கட்சி சார்பாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் உணவு பொட்டலங்கள் வழங்கல்.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் எஸ்.டிபிஐ கட்சி சார்பாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.

கொரோனாவால் உயிரிழந்த உடல்கள் நல்லடக்கம், இரத்ததான சேவை, ஆம்புலன்ஸ் சேவை, ஆக்சிஜன் சேவை என தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு தொடர்ச்சியாக உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பாளையங்கோட்டை பர்கிட்மாநகரம் எஸ்டிபிஐ கட்சி கிளை சார்பாக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உறவினர்களுக்கு உணவு பொட்டலங்கள் கொடுக்கும் நிகழ்ச்சி பிரசவ வார்ட் அருகே பர்கிட் கிளை தலைவர் சுபைர் முஹம்மது தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் பர்கிட் சேக் வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் சிட்டி சேக் உள்ளிட்டோர் துவங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கிளை செயலாளர் சேக் ,செய்யது அலி, செய்திருந்தனர். இளைஞர் அணி பொறுப்பாளர் சௌபர் சாதிக், கிளை துணை தலைவர் காஜா மைதீன்,தொழிற்சங்க செயலாளர் செய்யது அலி சிக்கந்தர், அசாருதீன், பயாஸ், ஷாஹின்ஷா, மைதீன்,ஆசிக் , உள்ளிட்ட கிளை நீர்வாகிகள் செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்.

Similar News