காவேரி ஆற்று படுகையில் உள்ள கிளை வாய்க்கால் தூர்வாரும் பணி - மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு.

Update: 2021-06-05 09:08 GMT

ஜீன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவுள்ள நிலையில் கரூர் மாவட்டத்தில் காவேரி ஆற்று படுகையில் உள்ள கிளை வாய்க்கால் தூர்வாரும் பணியை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி விஜய ராஜ்குமார் ஐஏஎஸ் அவர்கள் ஆய்வு.

ஆண்டுதோரும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து கடைமடை பகுதிக்கு சென்று குறுவை சாகுபடிக்கு பயன்படும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் 12ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்த நிலையில் அகண்ட காவிரி என்று அழைக்கப்படும் கரூர் மாவட்டத்தில், மாவட்டம் முழுக்க செல்லும் வகையில் கிளை வாய்க்கால்கள் இருந்து வருகிறது. இந்த கிளை வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

தண்ணீர் திறந்தவுடன் கிளை வாய்க்கால்களில் தடையின்றி செல்லும் வகையில் தூர்வாரும் பணி மிக சிறப்பாக செயல்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை வாய்க்கால்களில் பிரிந்து விவசாயத்திற்கு செல்லும் சிறிய பாசன வாய்க்காளில் தண்ணீர் செல்லும் வகையில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருவது வழக்கம்.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் ஒரு சில தினங்களில் கரூர் மாவட்டத்திற்கு வந்து அடையும் என்பதால் இதற்கான தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தூர்வாரும் பணியை ஆய்வு செய்வதற்காக கரூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரி விஜய ராஜ்குமார் IAS புஞ்சை புகழூர் வாய்க்காலில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கரூர் மாவட்டத்தில் நொய்யல் மரவாபாளையம், புஞ்சை புகழூர், நெரூர், குளித்தளை, இனுங்கனூர் உள்ளிட்ட 10 இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கண்காணிப்பு அதிகாரி விஜய ராஜ்குமார்,

தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் பாசன வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணி முறையாக நடப்பதை கண்காணிக்க இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 62 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய அகண்ட காவிரி ஆற்றில் பல்வேறு பாசன மற்றும் கிளை வாய்க்கால்கள் உள்ளன. 1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறக்கூடிய இந்த பணி தற்போது 30 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஜூன் 12ஆம் தேதிக்குள் முழுமையாக இப்பணி முடிவடையும். இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் 9704 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்தார்.

Similar News