கொரானோவிற்கு கிடைத்த கடிதம் ஒரு நிருபரின் ஆதங்கம்
அன்பில்லாதக் கொரனோவிற்கு அன்புள்ள தமிழன் வடிவேல் எழுதிக்கொள்வது.......
நான் நலமில்லை
நீ நலமுடன்
இருப்பாய் என்று
நன்றாக அறிவேன்.....
நூறு ஆண்டுகளுக்கு முன்
வந்து விட்டு போனதாக
வரலாறு கூறுகிறது.....
இப்போது வந்து
ஒன்றரை வருடமாகிறது
இன்னும் போக
மனம் வரவில்லையா..?
உன்னால்
இந்த மக்கள் படும்
கஷ்டங்கள்
நஷ்டங்கள்
வேதனைகள்
சோதனைகள்
துன்பங்கள்
துயரங்கள்
அழுகைகள்
அலறல்கள் கண்டு
உன் இதயம் இறங்கவில்லைா...
உன் இதயத்தில்
ஈரம் இல்லையா ...இல்லை
உனக்கு இதயமே இல்லையா?
உன்னிடம் இருந்து
தப்பிக்க
கையை
கழுவுவது எப்படி என்று
தெரிந்து கொண்டோம்....
ஆனால்
வயிற்றை
கழுவுவது எப்படி என்றுதான் தெரியவில்லை.....
எங்கள் நாடு
வல்லரசு நாடாகும் என்று
கனவு
கண்டு கொண்டிருந்தோமே!
ஆனால்
நீயோ!
அல்லும் பகலும்*
பிணங்களை எரிக்கும்
சுடுகாடாக
மாற்றி விட்டாயே....!
நீீ என்ன
பிணங்களை தின்று
கண்ணீரைக் குடித்து
பசியாறும் அரக்கனா....?
மக்களை
வீட்டிற்குள்
சிறை வைத்தாய்...
சோறு தண்ணி
இல்லாமல் செய்தாய்....
உரையாடி
மகிழ்வதை தடுத்தாய்....
உறவுகளை பிரித்தாய்...
நிம்மதியைக் கெடுத்தாய்... ஆலயங்களைச் சாத்தினாய்
பள்ளிகளை மூடினாய்
முதுமையைக் கொன்றாய்
இளமைகளைத் துன்புறுத்தினாய்
அப்படி என்ன?
இந்த மனித இனத்தின் மீது
உனக்கு
தீராத கோபம்
இது யார் போட்ட சாபம்....!
பசிக்கு அழும்
குழந்தையை
தாய்
மார்போடு சேர்த்ததும்
சுரந்தது
பால் அல்ல
தாயின் கண்ணீர் ....
பட்டினியாக கிடந்ததால்
தாயின் மார்பில்
பால் வராமல்
கதறி அழும் குழந்தையின்
அழுகையை கேட்டுப்பார்
அப்போதாவது
உன் மனம் மாறுகிறதா என்று
பார்ப்போம்....!
தாயை
இழந்த பிள்ளையும்...
கணவனை
இழந்த மனைவியும்....
தந்தையை
இழந்த மகனும்.....
மனைவியை
இழந்த கணவனும்....
பிள்ளையை
இழந்த தாயும்....
தந்தையை
இழந்த அண்ணனும்
அண்ணனை
இழந்த தங்கையும்
தம்பியை இழந்த
அண்ணனும்
கதறி கதறி அழும்
மரண ஓலத்தை
கொஞ்சம் நேரம் கேட்டுப்பார் அப்போதாவது
உனக்கு
மரணத்தின் வலி
என்னவென்று புரிகிறதா
என்று பார்ப்போம்....
இருக்கும் போது தான்
மனிதன்
நிம்மதியாக
இருக்க முடிவதில்லை ....
இறந்து பிறகாவது
நிம்மதியாக
இருக்கலாம் என்றால்...
ஈமச் சடங்கும் கூட
செய்யவிடாமல்
செய்து விட்டாயே......
நீ என்ன
பாவியிலும் பாவியா?
கொடும்பாவியே....
நீ எங்களை
எவ்வளவுதான்
கொடுமை படுத்தினாலும்
உன்னிடம்
சரணடைந்து
விடுவோம் என்று மட்டும்
மனதில் என்ன
கனவில் கூட
நினைத்து விடாதே...!
ஆயுத பலத்திலும்
ஆள் பலத்திலும்
பணப்பலத்திலும்
சூச்சி பலத்திலும்
எங்களை விட
பல மடங்கு
பலம் பெற்ற
ஆங்கிலேயர்களே!
எங்களிடம் இருந்த
ஒரே ஒரு பலமான
மனப்பலத்தை கண்டு
பயந்து
எங்கள் முன்னாடி
மண்டியிட்டு வணங்கி
வந்த வழியே
ஓடிப்போனார்கள்
தெரிந்துகொள்.......
நீ என்ன
எங்களை
ஒன்றரை ஆண்டாகதான்
கொடுமை படுத்துகிறாய்..
ஆனால்
ஆங்கிலேயர்களோ!
இரனூறு ஆண்டுகள்
கொடுமை படுத்தினார்கள்...
அப்போது கூட
நாங்கள்
உடல் என்ன
மனம் கூட
சோர்ந்து போகாமல்
போராடினோம்.......
நல்ல அரசும்
நல்ல மனசும்
இரும்பு கரம் கொண்டு
உதவி செய்யும் வரை
உன்னால்
ஒன்றும் செய்து முடியாது....
உன்னிடம்
வீழ்ந்து விடுவோம் என்று
நினைத்தோயோ....
மீண்டு வருவோம்...
ஏனெனில்....
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா..
தமிழர் என்று இனமுண்டு
அவர்களுக்கு
தனியே ஒரு குணமுண்டு...
என்பது
சும்மா தந்தது அல்ல
சுயமா வந்தது.....
தெரிந்து கொள்.....
மீண்டும் சந்திக்க மாட்டோம்....!!!
நீ இருந்தால் தானே!!!
வி.எம்.தமிழன் வடிவேல்...
பத்திரிகையாளர்.கொரானோவிற்கு ஒரு கடிதம்
அன்பில்லாதக் கொரனோவிற்கு
அன்புள்ள தமிழன் வடிவேல் எழுதிக்கொள்வது.......
நான் நலமில்லை
நீ நலமுடன்
இருப்பாய் என்று
நன்றாக அறிவேன்.....
நூறு ஆண்டுகளுக்கு முன்
வந்து விட்டு போனதாக
வரலாறு கூறுகிறது.....
இப்போது வந்து
ஒன்றரை வருடமாகிறது
இன்னும் போக
மனம் வரவில்லையா..?
உன்னால்
இந்த மக்கள் படும்
கஷ்டங்கள்
நஷ்டங்கள்
வேதனைகள்
சோதனைகள்
துன்பங்கள்
துயரங்கள்
அழுகைகள்
அலறல்கள் கண்டு
உன் இதயம் இறங்கவில்லைா...
உன் இதயத்தில்
ஈரம் இல்லையா ...இல்லை
உனக்கு இதயமே இல்லையா?
உன்னிடம் இருந்து
தப்பிக்க
கையை
கழுவுவது எப்படி என்று
தெரிந்து கொண்டோம்....
ஆனால்
வயிற்றை
கழுவுவது எப்படி என்றுதான் தெரியவில்லை.....
எங்கள் நாடு
வல்லரசு நாடாகும் என்று
கனவு
கண்டு கொண்டிருந்தோமே!
ஆனால்
நீயோ!
அல்லும் பகலும்*
பிணங்களை எரிக்கும்
சுடுகாடாக
மாற்றி விட்டாயே....!
நீீ என்ன
பிணங்களை தின்று
கண்ணீரைக் குடித்து
பசியாறும் அரக்கனா....?
மக்களை
வீட்டிற்குள்
சிறை வைத்தாய்...
சோறு தண்ணி
இல்லாமல் செய்தாய்....
உரையாடி
மகிழ்வதை தடுத்தாய்....
உறவுகளை பிரித்தாய்...
நிம்மதியைக் கெடுத்தாய்... ஆலயங்களைச் சாத்தினாய்
பள்ளிகளை மூடினாய்
முதுமையைக் கொன்றாய்
இளமைகளைத் துன்புறுத்தினாய்
அப்படி என்ன?
இந்த மனித இனத்தின் மீது
உனக்கு
தீராத கோபம்
இது யார் போட்ட சாபம்....!
பசிக்கு அழும்
குழந்தையை
தாய்
மார்போடு சேர்த்ததும்
சுரந்தது
பால் அல்ல
தாயின் கண்ணீர் ....
பட்டினியாக கிடந்ததால்
தாயின் மார்பில்
பால் வராமல்
கதறி அழும் குழந்தையின்
அழுகையை கேட்டுப்பார்
அப்போதாவது
உன் மனம் மாறுகிறதா என்று
பார்ப்போம்....!
தாயை
இழந்த பிள்ளையும்...
கணவனை
இழந்த மனைவியும்....
தந்தையை
இழந்த மகனும்.....
மனைவியை
இழந்த கணவனும்....
பிள்ளையை
இழந்த தாயும்....
தந்தையை
இழந்த அண்ணனும்
அண்ணனை
இழந்த தங்கையும்
தம்பியை இழந்த
அண்ணனும்
கதறி கதறி அழும்
மரண ஓலத்தை
கொஞ்சம் நேரம் கேட்டுப்பார் அப்போதாவது
உனக்கு
மரணத்தின் வலி
என்னவென்று புரிகிறதா
என்று பார்ப்போம்....
இருக்கும் போது தான்
மனிதன்
நிம்மதியாக
இருக்க முடிவதில்லை ....
இறந்து பிறகாவது
நிம்மதியாக
இருக்கலாம் என்றால்...
ஈமச் சடங்கும் கூட
செய்யவிடாமல்
செய்து விட்டாயே......
நீ என்ன
பாவியிலும் பாவியா?
கொடும்பாவியே....
நீ எங்களை
எவ்வளவுதான்
கொடுமை படுத்தினாலும்
உன்னிடம்
சரணடைந்து
விடுவோம் என்று மட்டும்
மனதில் என்ன
கனவில் கூட
நினைத்து விடாதே...!
ஆயுத பலத்திலும்
ஆள் பலத்திலும்
பணப்பலத்திலும்
சூச்சி பலத்திலும்
எங்களை விட
பல மடங்கு
பலம் பெற்ற
ஆங்கிலேயர்களே!
எங்களிடம் இருந்த
ஒரே ஒரு பலமான
மனப்பலத்தை கண்டு
பயந்து
எங்கள் முன்னாடி
மண்டியிட்டு வணங்கி
வந்த வழியே
ஓடிப்போனார்கள்
தெரிந்துகொள்.......
நீ என்ன
எங்களை
ஒன்றரை ஆண்டாகதான்
கொடுமை படுத்துகிறாய்..
ஆனால்
ஆங்கிலேயர்களோ!
இரனூறு ஆண்டுகள்
கொடுமை படுத்தினார்கள்...
அப்போது கூட
நாங்கள்
உடல் என்ன
மனம் கூட
சோர்ந்து போகாமல்
போராடினோம்.......
நல்ல அரசும்
நல்ல மனசும்
இரும்பு கரம் கொண்டு
உதவி செய்யும் வரை
உன்னால்
ஒன்றும் செய்து முடியாது....
உன்னிடம்
வீழ்ந்து விடுவோம் என்று
நினைத்தோயோ....
மீண்டு வருவோம்...
ஏனெனில்....
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா..
தமிழர் என்று இனமுண்டு
அவர்களுக்கு
தனியே ஒரு குணமுண்டு...
என்பது
சும்மா தந்தது அல்ல
சுயமா வந்தது.....
தெரிந்து கொள்.....
மீண்டும் சந்திக்க மாட்டோம்....!!!
நீ இருந்தால் தானே!!!