உலக சுற்றுச்சூழல் தினம்

Update: 2021-06-05 04:39 GMT

உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம்

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1972ம் ஆண்டு சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலகச் சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பிரயோகம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. அதன் முடிவில் ஜுன் 5ஆம் தேதியை 'உலக சுற்றுச் சூழல்' (World Environment Day) தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.

அதன்படி இன்று உலக சுற்றுச்சூழல் தினம். மனிதன் நாளுக்கு நாள் சுற்றுச்சூழலை மாசு படுத்தி தன் அழிவுக்கு தானே அடித்தளம் இட்டு வருகிறான். நமது வருங்கால சந்ததிக்கு இயற்கையான உலகை விட்டுச் செல்ல வேண்டுமென்றால், சுற்றுச்சூழலை பாதுகாத்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது உள்ளது. அதை சகலரும் உணரும் நோக்கில் செயல்பட வேண்டுமென்பதை இந்நாளில் உறுதி கொள்வோம்

Similar News