பூஞ்சை காளான் தொற்றுக்கு அறுவை சிகிச்சைகள் எதுவும் திருச்சி அரசு மருத்துவமனையில் செய்யப்படுவதில்லை
பூஞ்சை காளான் தொற்றுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகள் எதுவும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்படுவதில்லை.
ஆனால் அங்கே பணிபுரியும் மருத்துவர்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இதே அறுவை சிகிச்சையை செய்கிறார்கள்.வெளியே இதன் செலவு சுமார் 5 லட்சம் அளவில் ஆகிறது. எனவே சுகாதாரத் துறை அமைச்சரிடம் சொல்லி திருச்சி அரசு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள செய்ய வேண்டும்.
பூஞ்சை காளான் தொற்று வந்தவர்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனையிலேயே தங்கி இருந்து 20 நாள் ஆனாலும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. இதனால் தொற்று மேலும் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தும் நிலையே உள்ளது.அதாவது வெளியே தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செய்து கொள்ளக் கூடியவர்கள் பிழைக்கலாம்;வசதி இல்லை அரசு மருத்துவமனையை நம்பித்தான் வந்தோம் என்பவர்கள் உயிரை இழக்கலாம் என்பதே நிலையாக உள்ளது. மற்ற ஊர்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இதே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் திருச்சியில் இன்னும் ஒருவருக்கு கூட கருப்பு பூஞ்சைக்கான அறுவைசிகிச்சை செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஒரு சமூக ஆர்வலரின் அலைபேசி வேண்டுகோள்..