ஒரே ட்விட் மூலம் திமுகவின் தீவிர விசுவாசி என்ற அந்தஸ்தை இழந்து இருக்கிறார் சு. வீரபாண்டியன்

Update: 2021-06-04 14:50 GMT

 தமிழக அரசியலில் கடந்த இரண்டு நாட்களாக புயலை ஏற்படுத்திய சம்பவம் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம், ஒரு பக்கம் கருணாநிதிக்கு வாழ்த்துக்கள் குவிய மறுபக்கம் ஊழல்களின் தந்தை கருணாநிதி என ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக தொடங்கியது.

இந்நிலையில் தீவிர திமுக ஆதரவாளராக அறியப்படும் சுப வீரபாண்டியன் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்க சென்று இப்போது சொந்த கட்சி ஆதரவாளர்களால் விமர்சனம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தமிழர்களாய் பிறந்தவர்கள் நாங்கள் தமிழர்களுக்காக பிறந்தவர் நீங்கள் என கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார் சுபவீ.

இந்நிலையில் கருணாநிதி தமிழர் இல்லை என்பதை மறைமுகமாக சொல்கிறாரா? சுபவீ என கடும் விமர்சனங்கள் எழ தொடங்கின, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் சுபவீயின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி பல்வேறு விமர்சனங்களை முன்வைக்க தொடங்க, பதிவு ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் திமுகவை சேர்ந்த சிலரே ட்விட்டர் பதிவில் சுபவீக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர், அதில் திராவிட ஸ்டாக் என குறிப்பிட்ட சுபவீ இப்போது நாங்கள் தமிழர்கள் என பிரித்து பேசுவது பிரிவினையை உண்டாக்கும் செயல் எனவும் கருணாநிதியை தமிழர் இல்லை என சொல்லாமல் சொல்கிறீர்களா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஆளும் அரசிற்கும் யார் ஆதரவாக செயல்படுவது என கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் சுபவீ ஒரு படி மேலே சென்று வாழ்த்து சொல்ல கவிதை எழுத இப்போது கருணாநிதி தமிழர் இல்லையா? என்ற கேள்வி மீண்டும் எழ காரணமாக அமைந்துள்ளார் சுபவீ.

திமுகவினரே சுபவீயை கடுமையாக விமர்சனம் செய்யும் நிலையில் இதற்குத்தான் ஓவராக ஆட்டம் போட கூடாது என விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. ஒரே ட்விட் மூலம் திமுகவின் தீவிர விசுவாசி என்ற அந்தஸ்தை இழந்து இருக்கிறார் சு. வீரபாண்டியன்


Similar News