வ. வே. சு. ஐயர் நினைவு நாள் இன்று
இவர தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம்,பிரெஞ்ச், லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற தமிழர்!இவர் பெருமை பற்றி சில் வரிகள்: திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.தமிழில் முதல் சிறுகதை எழுதியவர்,ஆயுத பயிற்சி பெற்ற போராளி,தம் குருகுல மாணவர்களுடன் 03.06.1925 அன்று அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார்.
சுற்றுலாவைக்கூட மாணவர்களை வீரர்களாக உருவாக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதிய வவேசு அந்த அகண்ட அருவியை பயமின்றி தாண்ட வைத்து மாணவ்ர்களுக்கு பிராக்டிஸ் கொடுத்தார்.அப்போது . சிறுபெண்ணான சுபத்திரை தானும் அவ்வருவியை எந்த உதவியும் இன்றி தாண்ட விரும்பினார். அதற்கு வ.வே.சு ஆரம்பத்தில் அனுமதிக்க மறுத்து விட்டார்
உடனே அப்பா வவேசுவிடம்"ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்று முழக்கமிடும் நீங்கள் பெண் என்பதால் என்னை தாண்ட அனுமதிக்காமலிருக்கிறீர்களா?" என்று கோபமாக கேட்டதும் சுபத்ரையை உச்சி முகர்ந்து அந்த பெண் குழந்தையையும் அருவி தாண்ட அனுமதி தந்தார்.
ஆனால் துர்ரதிர்ஷடவசமாக சிறு பெண்ணான சுபத்திரை அம்முயற்சியில் தவறி அருவியில் விழுந்து விட்டாள்
இதை எதிர்பார்க்காத வ வே சுவும் அவரைக் காப்பாற்ற குதித்து....அவரும் காலமாகி விட்டார்😪